
கஷ்டங்களைக் கண்டு ஓடவில்லை, துன்பங்களை நினைத்து வருந்தவில்லை, அன்பான உறவை விட்டு விலகவில்லை, உண்மையாக வாழ்வதை வெறுக்கவில்லை
சில நேரம் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுகிறோம் ஆனால் ஒரு நாள் தவறாமல் எமக்கு அனைத்தையும் இறைவன் செய்து விடுகிறான்.
சொல்ல முடியாத சோகங்கள், வெல்ல முடியாத வேகங்கள், என்ன முடியாத துன்பங்கள் என்று வாழ்க்கையை கஷ்டங்களுடன் வாழும் பல மனிதன் உலகில் உள்ளான்.
பிறருடன் அதிகமாக பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் வீண் பேச்சி சில நேரம் எம் மூச்சை நிறுத்திவிடலாம் என்பதை நாம் மறந்திட கூடாது !
நிச்சியமாக எமக்கு மனிதர்களிடத்தில் எந்த வித தேவைகளும் இல்லை என்பதை உணர்ந்து எது நடந்தாலும் இறைவனை தேடியே செல்ல வேண்டும்.
உள்ளத்தில் நிம்மதியில்லை என்று கூறி கடலோரம் சென்று தனியாக சிந்திப்பதால் எந்த வித பயனுமில்லை எனவே எந்நேரமும் இறைவனை மட்டும் நினைவுகூருங்கள்.
அன்பாக பேசி பழகும் சிலர் எமக்கு பல சோகங்களை தந்துவிடுகின்றனர் எனவே நாம் அவர்களுக்கு சந்தோசத்தை மட்டும் வழங்க வேண்டும்.
பொறுமையிழந்து சில நேரம் மனிதன் பல முடிவுகளை எடுத்து விடுகிறான் தன்மேல் குற்றம் என்றால் அதை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் மனிதனே சிறந்தவன்.
வரிகள் :- அப்துல் ஹமீட்.
No comments:
Post a Comment